அருகம்புல்லின் அருங்குணம்… உடலை குளுமையாக்கும்…!

சென்னை:
எளிமையாக கிடைக்கும் அருகம்புல்லில் உள்ள மகத்துவத்தை இன்னும் பலர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.

ஆடு, மாடுகளுக்குதான் அருகம்புல், உணவு. ஆனால் மனிதர்களுக்கு அது மருந்து. அருகம் எளிமையாக கிடைப்பதால், அதை பலர் ஏளனமாக நினைக்கின்றனர். அதன் மகத்துவம் அறிந்தால், மறக்க மாட்டார்கள். அருகம்புல்லுக்கு பல விசேஷமான தன்மைகள் இருக்கின்றன.

நாக்கு வறட்சி, நாக்கு சுவை தெரியாமல் போவது, வாந்தி, எரிச்சல், பித்த மயக்கம், சோர்வு இது எல்லாவற்றுக்கும் அருகம்புல் சாறு மிகவும் நல்லது. ரத்த பித்தத்தை தணித்து, உடம்பை குளுமையாக்கும் சக்தி, அருகம்புல்லுக்கு இருக்கிறது.

அக்கி என்பது ஒரு அவஸ்தையான தோல் நோய். இந்நோய் வந்தவர்கள் அருகம்புல்லின் வேரை எடுத்து, கழுவி, சுத்தமான தண்ணீரில் வேகவைத்து, பசு நெய் கலந்து பூசிக் குளித்தால், நோயின் தாக்கம் குறையும்.

அதே போல், அருகம்புல்லின் வேரை அரைத்து, அந்த விழுதோடு, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து சாப்பிட்டால், பித்த வாந்தி தணியும். அருகம்புல் ஜூஸுக்கு, பித்தப்பை கல், சிறுநீரகக் கல், ஆகியவற்றை கரைக்கும் சக்தி உள்ளது.

அருகம்புல்லை வேரோடு அரைத்து விழுதாக்கி, அதோடு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நலங்கு மாவு கலந்து உடம்பில் பூசி குளித்தால்… சொறி, சிரங்கு, அரிப்பு எல்லாவற்றையும் போக்கும்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!