திருச்சியில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் சார்பில் அஷ்ட பைரவர் மகா வேள்வி… திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி:
திருச்சி உறையூர், நாச்சியார்கோவில் பஸ்ஸ்டாப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீராமர் மடத்தில் நேற்று (6ம் தேதி) மாலை 5 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்ட பைரவர் மகா வேள்வி நடந்தது.

திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் மற்றும் சர்வம் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த மகா வேள்வி நடந்தது. வேள்வியை தென் கைலாய சுருளி மலை சித்தர் ஓம் ஸ்ரீ பரமானந்த பாபாஜி நடத்தினார்.

நேற்று மாலை 5 மணி முதல் தொடங்கிய இந்த மகா வேள்வியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். எம பயம் நீங்குவதற்கும், தீராத நோய்களில் இருந்து விடுபடவும், செய்வினை கோளாறுகள், கடன் தொல்லைகள், தீராத வழக்கு பிரச்னைகள், சனி கிரகத்தினால் ஏற்படக்கூடிய சகல தோஷங்கள், நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடவும் வேண்டி இந்த மகா வேள்வி நடந்தது.

மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் அஷ்ட பைரவர் மகா வேள்வி பூஜை நடந்தது. இந்த வேள்வியின் போது மழை பெய்ததால் பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். இந்த மகா வேள்ளி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று நடக்கிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!