குணச்சித்திர நடிகர் கணேஷ்குமார். மலையாள நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

மலையாள சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் கணேஷ்குமார். மலையாள நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட.. மூன்றுமுறை எம்.எல்.ஏவாக தேர்வான கணேஷ்குமார், இன்று காலை, தனது டிரைவருடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை அவரது தாயின் கண் முன்னே தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை கொல்லம் பகுதியில் ஒரு துக்க வீட்டிற்கு துக்கம் விசாரிக்க தனது காரில் சென்றார் கணேஷ்குமார். அந்த வீட்டை நெருங்கும்போது அதே வீட்டிலிருந்து கிளம்பி, தனது தாயுடன் வந்த அனந்தகிருஷ்ணன் என்கிற இளைஞர் தனது வாகனத்தை கணேஷ்குமார் காரின் முன்னால் நிறுத்தியதால் வழிவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கோபத்துடன் காரில் இருந்து இறங்கிய கணேஷ்குமார் அந்த இளைஞரை அவரது தாயின் கண்முன்னே கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். உடன் கணேஷ்குமாரின் டிரைவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட நபர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிசை பெற்று வருகிறார்.

Sharing is caring!