செம்மண் தள கிங்…. நடால்… மீண்டும் சாம்பியன் ஆனார்

பாரீஸ்:
11 வது முறையாக வெற்றிப் பெற்று மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார் ரபெல் நடால்.

7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார்
செம்மண் கோர்ட்டில் கிங் ஆன நடால்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நேற்று மாலை நடந்தது.

இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா)மை சந்தித்தார். செம்மண் கோர்ட் ராஜாவான நடாலின் ஆட்டத்திற்கு டொமினிக் தீமால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றிய நடால் 3-வது செட்டையும் 6- 2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 11-வது முறையாக பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!