பிளே ஆப் சுற்றிற்கு செல்லும் வாய்ப்பில் சிஎஸ்கே

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேவில் நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை, பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தவான் 49 பந்தில், 10 பவுண்டரி 3 சிக்ஸர் என 79 ரன்கள் அடித்தார். வில்லியம்சன் 39 பந்தில் 51 ரன்கள் அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன் – அம்பதி ராயுடு ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

10. 4 ஓவரில் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. வாட்சன், ராயுடு இருவரும் தங்களது 31வது பந்தில் அரை சதங்களைக் கடந்தனர்.

14வது ஓவரில் 57 ரன்களை எடுத்த வாட்சன் ரன் அவுட் ஆனார்.

அப்போது அணியின் ஸ்கோர் 134ஆக இருந்தது.

பின்னர் வந்த சுரேஷ் ரெய்னாவும் (2) அதிக நேரம் நீடிக்கவில்லை. இதையடுத்து ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த தோனி, தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு, ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அம்பதி ராயுடு உள்ளூர் போட்டிகளில் 2001ம் ஆண்டு ஹைதராபாத் அணியில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர் ஆந்திரா, பரோடா, விதர்பா அணிகளுக்காக விளையாடி கடந்த ஆண்டு மீண்டும் ஹைதராபாத் அணியில் இணைந்திருந்தார். சென்னை அணியில் ஆடிவரும் ஹைதராபாத்தை சேர்ந்த ராயுடு இந்த வெற்றியின் மூலம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளை பெற்று சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நிலையில் இருக்கிறது.

Sharing is caring!