ரொஜர் பெடரருக்கு மீண்டும் முதல் இடம்

உலக டென்னிஸ் ஒற்றையர் தர வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக டென்னிஸ் வீர வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்பிரகாரம் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் 8,670 புள்ளிகளை பெற்று 2 ஆவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபேய்ல் நடால், மெட்ரிட் பகிரங்க போட்டியில் காலிறுதியுடன் வெளியேறியதால் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3 ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

Sharing is caring!