வீட்டில் சிங்கம் வளர்ப்பதா? அப்ரிடிக்கு குவியும் கண்டனங்கள்

இஸ்லாமாபாத்:
வீட்டில் சிங்கம் வளர்ப்பதா என்று மாஜி கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் 2 புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஒன்றில் அப்ரிதி, மான் குட்டி ஒன்றிற்கு புட்டியில் பால் கொடுப்பது போன்ற புகைப்படமும், அடுத்ததில் அவர் மகள் கைகளை உயர்த்தி நிற்க பின்புறம் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் சிங்கக்குட்டி ஒன்று படுத்திருப்பது போன்ற புகைப்படமும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

வனவிலங்குகளை வீட்டில் வளர்ப்பதற்கு சிலர் அப்ரிடிக்கு பாராட்டு தெரிவித்தாலும், நெட்டிசன்கள் பலரும் விலங்குகள் நல ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காட்டில் வாழும் விலங்குகளை வீட்டில் வைத்து அப்ரிடியால் எவ்வாறு இயற்கையான உணவுமுறையை வழங்க முடியும்? சங்கிலியால் அவர் கட்டி வைத்துள்ளதால் சிங்கம் மெலிந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது.

இவ்வாறு விலங்குகளை சங்கிலியால் கட்டி வைத்துள்ளது அவற்றின் மீது பாசமும், அக்கறையும் காட்டுவதாக இல்லை. இது மனிததன்மைக்கு எதிரானது என்றே எண்ணத் தோன்றுகிறது என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!