மறக்க முடியவில்லையா? வந்துவிட்டது அழிக்கும் தொழில்நுட்பம்

மனித வாழ்வில் மற்றியமைக்க முடியாததும், அழிக்க முடியாததும் பழையகால நினைவுகள் மட்டுமே! சில இனிமையாக நிகழ்வுகள் நம்மை காயப்படுத்துவதில்லை ஆனால் கசப்பான சம்பவங்கள் சாகும்வரை நினைவில் வந்து மனதை வருடிக்கொண்டே இருக்கும். இதற்கு தீர்வாக பழைய நினைவுகளை மனதில் இருந்து அழிக்கும் தொழில் நுட்பம் கண்டறியபட்டுள்ளது.

இன்றைய இளசுகளுக்கு பெரிய தொல்லையாக இருப்பது பழைய நினைவுகள் தான், அது முதல் காதலாக இருக்கலாம், முதல் நட்பு, கொடிய விபத்து என சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் மறக்க அம்னீசியா நோய் வருவதே ஒரே தீர்வு என புலம்புவர்களும் உண்டு. ஆனால் மூளையின் ‘டென்ட்டேட் கய்ரஸ்’ எனப்படும் நியூரான்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதன் வாயிலாக நம்மை வாட்டி வதைக்கும் பழைய நினைவுகளை அழித்துவிடலாம் என ஸ்விட்சர்லாந்து பேராசிரியர் ஜோஹான்னெஸ் கிராஃப் தலைமையிலான குழு ஆய்வு செய்துள்ளது. எலிகளை வைத்து நடத்திய இந்த ஆய்வு வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Sharing is caring!