அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு ஆரம்பம்!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு அமைய யா.அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவை இந்த ஆண்டில் முதன்முதலாக ஆரம்பித்து செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் 2017 ஆம் ஆண்டில் ஜீ.சீ.ஈ. (சாதாரண) பரீட்சையில் தோற்றி ஜி.சி.ஈ. (உயர்தரம்) கற்கத் தகுதியுடைய மாணவர்களையும் ஏனைய அயற் பாடசாலைகளில் சித்திபெற்று உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கவுள்ள மாணவர்களையும் இணைக்கப்படவுள்ளது.

புதிய பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூரணப்படுத்திச் சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Sharing is caring!