நயினை நாகபூஷணி அம்மன் பாடல் இறுவட்டு வெளியீடு

நயினை நாகபூஷணி அம்மன் பாடல் இறுவட்டு வெளியீடு தொடர்பான செய்தி தரப்பட்டுள்ளது.

அன்பான உறவுகள் மற்றும் நண்பர்களே,
எனது குலதெய்வமாகிய இலங்கை நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் பாடல்கள் அடங்கிய “நாகவேதம்” என்னும் இறுவட்டினை வரும் மே 13 ஆம் தேதி Ontario (Canada) வில் வெளியிட உள்ளோம்.

இதில் எனது இசையில், எனது சகோதரி திருமதி.சாருமதி மனோகாந்தனுடன் பிரபல பின்னணி பாடகர்களான திரு.மதுபாலகிருஷ்ணன் , திரு.V.V.பிரசன்னா , திரு. ஸ்ரீராம் பார்த்தசாரதி , திரு. அனந்து ஆகியோர்கள் பாடி உள்ளனர்.

இதில் என்னுடன் இணைந்து பணியாற்றிய எனது இசைக்குழு (Beatz Live Band) கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறேன்.

அனைவரும் இந்த பாடல்களை கேட்டு உங்களது ஆதரவை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்!!!

Sharing is caring!