பண்பாட்டுப்பெருவிழா நிகழ்வு எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிளார் கூட்டுறவு சங்க மைதானத்தில் நடைபெற்றது

ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் ஊர்காவற்றுறை கலாசார பேரவையும் இணைந்து பண்பாட்டுப்பெருவிழா நிகழ்வு 12.05. 2018 எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிளார் கூட்டுறவு சங்க பொது மைதானத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி . மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் இடம்பெற்றது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு ஊர்காவற்றுறை பிரதேச மூத்த கலைஞர்களுக்கு “கலைவிழுது” விருதினையும் இளம் கலைஞர்களுக்கு “கலைமுகிழ்” விருதினையும் வழங்கி கெளரவித்தார்.
கலைஞர்களை கௌரவிக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் சமூகத்தைப் புதிப்பிக்க உதவும் ஆரம்பப்பணிகளாக அமைவதால் இந்நிகழ்வை நெறிப்படுத்திய அரச அதிகாரிகள் மக்கள் மற்றும் மதிப்புமிக்க கலைஞர்பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக்கொள்வோம்.

படங்களுடன் தகவல்: திரு.த.கோகுலராஜ்

Sharing is caring!