Monday , September 25 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் / VR தொழில்நுட்பத்தில் வீடியோ ஹேம்களை உருவாக்கும் பிரபல நிறுவனத்தை கையகப்படுத்தும் கூகுள்

VR தொழில்நுட்பத்தில் வீடியோ ஹேம்களை உருவாக்கும் பிரபல நிறுவனத்தை கையகப்படுத்தும் கூகுள்

முப்பரிமாண தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக தற்போது வீடியோ ஹேம் உலகினை ஆக்கிரமித்து வருவது VR தொழில்நுட்பம் எனப்படும் மாயவிம்பத் தோற்றமாகும்.

இத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வீடியோ ஹேம்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமாக Owlchemy Labs விளங்குகின்றது.

இந்த நிறுவனத்தினை கையகப்படுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

தற்போது இரு நிறுவனங்களுக்கும் இடையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் எவ்வளவு தொகை கொடுத்து குறித்த நிறுவனத்தினை கூகுள் கையகப்படுத்தவுள்ளது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

எவ்வாறெனினும் கூகுளின் பல்வேறு வகையான முயற்சிகளுக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.

இதே போன்று இப் புதிய முயற்சியினூடாக ஹேம் பிரியர்களுக்கு கூகுள் ஆனது பாரிய விருந்து வைக்கும் என்பது திண்ணம்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top