சில பிரதேசங்களளுக்கு மண் சரிவு எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்குள் 100-150 மில்லிமீற்றர் அளவு மழை வீழ்ச்சி பதிவாகினால் சில பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படலாம் என்று அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சப்ரகமுவ மற்றும் களுத்துறை, காலி, மாதறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு கடும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக நெலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply