ஜனாதிபதி வருகைக்காக கிளிநொச்சியில் பொலிசார் குவிப்பு

கிளிநொச்சியில் நாளை (14) ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்விற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்புாது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருவேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அதிகளவான பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களைப் போன்றல்லாது இராணுவத்தினரின் பிரசன்னம் குறைவாகவே உள்ளதுடன், அதிகளவில் பொலிசாரே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply