பசும்பால் வளர்ச்சியின் பயணம்

பசும்பால் வளர்ச்சியின் பயணம் !!பசும் பால் ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சியின் முதல் படி , பன்னெடுங்காலமாக இன்றும் குழந்தைகட்கு பசும் பால் கொடுப்பது ஒரு நல்ல மற்றும் சிறந்த பலனை கொடுத்துவருகிறது.

குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும்.

ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. பால் உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது சிறந்த புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் ஆகியவை குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது.

பசும்பாலில் போதியளவு கால்சியம் உள்ளது. இது உங்கள் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. அதிகளவு கால்சியம் மற்றும் ஏனைய சத்துகள் மூலம் இது குழந்தைகளின் தசைக் கட்டுப்பாடு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

 

பசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல் பச்சை பால் உண்ணும் முறை என்பது வேகமாக பரவி வருகின்றது.இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்

ரிய உதய காலத்தில் பச்சை புல் மேய்ந்த ஆரோக்யமான பசுவின் பசும்பால் உண்பதால் கை கால் எரிச்சல், திரேக எரிச்சல், மஞ்சள் காமாலை,பாண்டு,இரத்த பித்தம், மார்பு சளி, போன்ற நோய்கள் தீரும்.தேகம் ஒளிவிடும், தாது புஷ்டி உண்டாகும்,
மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கரந்து சுத்தமான துணியில் 3 முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.

சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருவது முக்யமாகும்.

வயிற்றுப் புற்றுநோய்க்கு காரணமாக அமையும் செல்களை அழிக்கும் திறன் பசும்பாலுக்கு உண்டு என்று தைவானைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆண்களின் விந்து சக்திக்கு ஆலமரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப்படும்

பருத்தி இலைச் சாற்றை பசும்பாலில் கலந்து பருகி வர பெண்களுக்கு உருவாகும் பெரும்பாடு நோய் குணமாகும். வன்னிமரத்து இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அரிப்பு குறையும்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்றவைதான். பசும்பாலில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply