பேஸ்புக்கில் வெளியிட்ட சைக்கோ கொலைகாரன் தற்கொலை

saiko001அமெரிக்காவின் ஒகியோவை சேர்ந்தவன் ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் (37). இவன், ஈஸ்டர் பண்டிகை அன்று விருந்து முடிந்து தனது வீட்டுக்கு நடந்து சென்ற 74 வயது முதியவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

அந்த வீடியோவை ‘பேஸ்புக்’ இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். மேலும் தான் 14 வயதில் இருந்து இதுவரை 13 பேரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தான்.

எனவே அவனை பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இவன் மனநிலை பாதிக்கப்பட்டவன். எனவே அவன் பலரை கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்கும்படி 5 மாகாண பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் இருந்தனர்.

மேலும் அவன் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.33 லட்சம் (50 ஆயிரம் டாலர்) பரிசு வழங்குவதாகவும் அறிவித்து இருந்தனர்.

பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் கொலையாளி ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் தற்கொலை செய்து கொண்டான். இவனை பென்சில்வேனியாவில் பொலிசார் விரட்டி சென்றபோது காரில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply