விபத்தில் சிக்கிய முன்னாள் பிரதியமைச்சர்

முன்னாள் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன கொஸ்கம பகுதியில் வைத்து விபத்தொன்றில் சிக்கியுள்ளார்.

அவர் பயணித்த காரொன்று அதற்கு எதிர்த்திசையில் பயணித்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான கீதாஞ்சன அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடை மற்றைய வாகனத்தில் இருந்து 4 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் 28 மற்றும் 31 வயதான இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாளிகாவத்தை மற்றும் தலதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply