ஹம்பாந்தோட்டை விவகாரம்: விசாரணை ஆரம்பம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸ் பொறுப்பில் இருந்த நபரை, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, மூவர் அடங்கிய குழுவொன்று நேற்று ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மேலும், இவர்கள் ஒரு வாரம் அளவில் அங்கு தங்கியிருந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த குழுவின் அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்.

அண்மையில், ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர், அப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் தாக்கப்படுவது போன்ற காணொளிகள் வௌியாகின.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த விடயம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply