புரோட்டீன் சுண்டல்

புரோட்டீன் சுண்டல்

தேவையானவை:

பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) – தலா ஒரு கப்,
கேரட், தேங்காய் துருவல் – தலா ஒரு கப்,
நறுக்கிய வெள்ளரி – ஒரு கப்,
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முளைகட்டிய நான்கு பயறுகளையும் (வேர்க்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு, பாசிப்பயறு) உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து, மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கிக் கொடுக்கவும்.

குறிப்பு:

இது புரோட்டீன் சத்து நிறைந்தது. கேரட், வெள்ளரி சேர்த்து சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.

Sharing is caring!