அடர்த்தியாக முடி வளர் இந்த ஒரு பொருளை மட்டுமே யூஸ் பண்ணி பாருங்கள்..!!

ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டிய பிறகு தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

வாரம் ஒரு முறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

வாரம் ஒருமுறை செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வெங்காயம் சேர்த்தாலே உணவிற்கு ஒரு தனி சுவை கிடைக்கும். வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. முடி வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.

வெங்காய சாறை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி கொள்ளவும் மிக்ஸி யில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

ஒரு துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

வெங்காய திப்பிகள் முடிகளில் சேராதவாறு வெறும் சாறை மட்டும் பயன்படுத்தவும்.

வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை, வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும்.

விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.

வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும்.

வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.

Sharing is caring!