அட கருப்பு அழகியா நீங்க? இந்த மாதிரி மேக்கப் பண்ணுங்க! அப்புறம் எல்லாரும் அசந்துடுவாங்க

பொதுவாகவே மாநிறமாக இருக்கும் பெண்களுக்கும் சரி, கறுப்பாக இருக்கும் பெண்களுக்கும் சரி மனசுல சின்னதா ஒரு ஏக்கம் இருக்கும். அது என்னனா நாம கலரா இல்லையேன்னு. அப்படி ஃபீல் பண்ணுற ஆளா நீங்க! உங்களுக்கு தான் இந்த கட்டுரை..

ஒண்ணு சொல்லட்டா தோல் நிறத்துக்கும் அழகுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நாம எப்படி மேக்கப் பண்ணுறோம், அதை எப்படி ப்ரெசென்ட் பண்ணுறோம்னு கரெக்டா தெரிஞ்சுகிட்டாலே எல்லாரையும் உங்களை நோக்கி  திரும்பிப் பார்க்க வெச்சிடலாம்.

1.  மாய்ஷரைசர் 


நம்ம சருமம்  ஈரப்பசை இல்லாமல்  வறண்டு இருந்தா பார்க்கவே அசிங்கமா தெரியும். அதனால் தினமும் குளித்து முடித்தவுடன் கை, கால், முகம்  முடிந்தால் உடல் முழுவதும்  மாய்ஷரைசர் கிரீமை சிறிதளவு பூசின மாதிரி தடவுங்கள். இதனால் உங்கள் முகமும், உடலும் எப்போதும் சற்று பளபளவென காட்சியளிக்கும்.

குறிப்பு: நீங்கள் பயன்படுத்தும் மாய்ஷரைசர் கிரீமில் குறைந்தது  SPF 30 என்ற அளவில் இருக்க வேண்டும்.

Sharing is caring!