அழகுக்கு மேல் அழகு தரும் டிப்ஸ்கள்…!

அழகான கூந்தலுக்கு ஆலிவ் ஆயில்ஆலிவ் ஆயிலை டபுள் பாய்லிங் முறையில் லேசாகச் சூடுபடுத்தவும். அதாவது, நேரடியாக அடுப்பில் வைத்துச் சூடாக்காமல் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை எடுத்துக் கொண்டு அதைத் தண்ணீர் உள்ள வேறொரு பாத்திரத்தின் மேல் மூழ்கிவிடாதபடி வைத்துச் சூடுபடுத்துவதுதான் டபுள் பாய்லிங் முறை. இந்த எண்ணெயைத் தலை முழுவதும் தாராளமாகத் தடவி ஷவர் கேப் அணிந்து அதன்மேல் ஒரு டவலைச் சுற்றிக்கொள்ளவும். 45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூவால் கூந்தலை அலசவும். இந்த சிகிச்சை கூந்தலுக்கு அதிகபட்ச வலிமையைத் தரும். கூந்தலின் வறட்சியைப் போக்கும். கூந்தல் உடைவதைச் சரி செய்யும். வெயிலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். கூந்தலைக் கண்டிஷன் செய்து மென்மையாக்கும்.

சருமத்துக்கு சர்க்கரை மசாஜ்!

அதிகப்படியான வெயிலினால் சிலருக்குக் கை கால் போன்ற இடங்களில் சருமத்தின் நிறம் மாறியிருக்கும். அதற்கு சர்க்கரை சிறந்த தேர்வு. கைகளைத் தண்ணீரில் நனைத்து, அதே ஈரத்துடன் கைகளில் சர்க்கரையைத் தொட்டுக்கொள்ளவும். இந்தச் சர்க்கரைக் கைகளால் கை, கால், கழுத்து போன்ற இடங்களில் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின் குளித்தால், சருமத்தின் மேலுள்ள இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்வுடன் செயல்படலாம்.

பூப்போன்ற பாதங்களுக்கு பாதாம் எண்ணெய்!

கால்களில் எண்ணெய்ச் சுரப்பி இல்லை என்பதால், குளிர் நேரத்தில் கால்கள் அதிக வறட்சியுடன் காணப்படும். இதனால், பாதங்களில் அதிகப்படியான வெடிப்புகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க, மிதமான வெந்நீரில் கால்களை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர், மிருதுவான துண்டால் ஈரத்தைத் துடைத்து எடுக்கவும். பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசிங் அப்ளை செய்து, பிறகு சாக்ஸ் அணிந்து தூங்கவும். தினமும் தொடர்ந்து செய்துவந்தால் பாதங்கள் பூப்போன்று மிருதுவாக இருக்கும்.

சரும வறட்சியைச் சரி செய்யும் நான்கு விஷயங்கள்!

ஏசியில் பணிபுரிபவர்களுக்குச் சருமம் கூடுதல் வறட்சியாகும். எனவே, ரோஸ் வாட்டர், கிளிசரின், லாவண்டர் ஆயில் மூன்றையும் சம அளவில் எடுத்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்துகொள்ளலாம். அல்லது சுத்தமான பஞ்சில் நனைத்து முகத்தை ஒத்தியெடுத்தால் ஏசியினால் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதெல்லாம் செய்ய நேரம் இருக்காது. அவர்கள், இரவு படுப்பதற்கு முன்பு, பாதாம் ஆயிலையும் கிளிசரினையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து படுத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை, மைல்டான ஃபேஷ் வாஷ் க்ரீம் மூலம் முகத்தைச் சுத்தம் செய்தால், சருமம் வறட்சியின்றி இருக்கும்.

சருமச் சுருக்கங்களைப் போக்கும் ரைஸ் வாட்டர்!

கொரியன் பெண்கள் காலையில் அரிசி களைந்த தண்ணீரில்தான் முகத்தை வாஷ் செய்கிறார்கள். ஒரு கப் அரிசியில் 2 கப் தண்ணீர்விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடித்து, பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வையுங்கள். இதை ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தலாம். முகத்தை வாஷ் செய்ததும், இந்த ரைஸ் வாட்டரை முகத்தில் ஸ்பிரே செய்யுங்கள். அரிசி களைந்த நீரில் இருக்கும் சத்துகள், சருமத்தின் துவாரங்கள் வழியாக உள்ளே சென்று, சுருக்கங்களை நீக்கி, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

அழகான உதடுகளுக்கு வெண்ணெய்க்கு மாறுங்க!

உதடுகள் வெடிப்புகளுடனும் சுருக்கங்களுடனும் கறுத்துக் காணப்படுபவர்கள் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சேர்க்காத வெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் உதடுகளில் அப்ளை செய்து கொள்ளவும். தொடர்ச்சியாக ஒரு வாரம் இதைச் செய்து வர உதடுகள் இயற்கைச் சிவப்பழகு பெறும்.

கரும்புள்ளி காணாமல்போக இதை ட்ரை பண்ணுங்க!

ஜாதிகாய்த்தூளுடன் சந்தனத் தூளைச் சம அளவில் எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள்தூள் கலந்து முகத்தில் பேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்தாலும் கரும்புள்ளி காணாமல்போகும்.

ஃபிரெஷ்ஷான கண்களுக்கு வெண்தாமரையும் விளக்கெண்ணெயும்…

சில பெண்களுக்கு முகம் பளிச்சிட்டாலும் கண்கள் சோர்வடைந்து காணப்படும். இது அவர்களின் முக அழகைக் கெடுக்கும். எனவே, கண்களைப் புத்துணர்வுடன் வைத்திருக்க, ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண் ணெய்யுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை, காற்று புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைக் கண்கள்மீது தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் கிடைக்கும்.

பொடுகை விரட்டும் கொத்தமல்லி!

நல்லெண்ணெய்யைச் சூடாக்கி, அரை டீஸ்பூன் வெந்தயம் போட்டுப் பொரிக்கவும். பிறகு, சிறிதளவு கறிவேப்பிலையைப் போட்டுப் பொரியவிடுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, கைப்பிடி அளவு கொத்துமல்லியைப் போட்டுப் பொரியவிடுங்கள். இந்த எண்ணெயைத் தடவுங்கள். அல்லது கடைகளில் கிடைக்கும் கொரியாண்டர் ஆயிலை வாங்கிப் பயன்படுத்துங்கள். பொடுக்குப் பெரிய எதிரி கொத்துமல்லிதான்.

மணப்பெண்களுக்கான பாடி பாலிஷிங்!

ஸ்பா பாடி பாலிஷிங் எனக்கு
ஒத்துக்குமா, அது ரொம்ப காட்ஸ்லியாச்சே;
கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை பாடி
பாலிஷிங் செஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்’
என நினைக்கும் மணப்பெண்கள், இந்த பாடி பாலிஷிங்கை
வீட்டிலேயே சூப்பராகச் செய்துகொள்ளலாம். முதலில், ஆயில் மசாஜ். முழு
உடம்புக்கு 100 மில்லி ஆயில் வேண்டும்.
பாதாம் எண்ணெய், சந்தன எண்ணெய், மல்லிகை
எண்ணெய், ரோஜா எண்ணெய் ஆகியவற்றை
தலா 25 மில்லியாக எடுத்து, ஒன்றாகக் கலக்கவும். முகத்திலிருந்து பாதம் வரை தடவி
15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, பெரிய பாத்திரத்தில்
தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆவி பிடியுங்கள். இது
5 முதல் 8 எட்டு நிமிடங்கள் எடுத்தாலே
போதும். ஆவி பிடிப்பதற்கு முன்பு,
ஒரு பெரிய டம்ளர் நிறையத்
தண்ணீர் குடிப்பது முக்கியம். அப்போதுதான், உடம்பிலிருந்து வெளியேறும் தண்ணீரை ஈடுகட்ட முடியும்.
அடுத்து, பாடி பாலிஷிங். இதற்குக்
கரகரப்பான கடலைமாவு, (அல்லது பாசிப்பருப்பு மாவு,
அல்லது அடிசி மாவு) ஒரு
டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள்
ஒரு டீஸ்பூன், பட்டைத்தூள் கால் டீஸ்பூன், தேவையான
அளவு தயிர் நன்கு கலந்து,
உடல் முழுக்கத் தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
பிறகு, மெதுமெதுவாக வட்ட வட்டமாகத் தேய்த்து,
மேல் நோக்கியே மசாஜ் செய்து, குளியுங்கள்.
தயிர் அழுக்கை நீக்கும். மாவு
வகைகள் இறந்த செல்களைப் போக்கும்.
கஸ்தூரி மஞ்சள் கிருமிகளைக் கொல்லும்.
பட்டைத்தூள் சருமத்தில் ஒரு விறுவிறுப்பை உண்டாக்கி
ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை ஹெல்தியாக்கும். இது, தாய்லாந்து ராணிகளின்
அழகுக் குறிப்பு.

Sharing is caring!