அழகுடன் ஜொலிக்க இதோ சில பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..!!!

இன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர்.

அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம்.

இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.

கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

சருமத்தை அழகுடன் வைத்து கொள்ள இதுபோன்ற பொருட்கள் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும்.

தற்போது சில பயனுள்ள அழகு குறிப்புகள் இங்கே பார்ப்போம்.

 • ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
 • முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
 • தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
 • பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
 • துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
 • வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
 • உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
 • நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.
 • பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
 • முட்டையின் வெள்ளைகரு,தேன்,மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
 • பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
 • சருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்துவிட்டு குளியுங்கள்.
 • பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகம் , கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.
 • எலுமிச்சை பழச்சாறு,பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
 • பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.
 • கொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
 • ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.
 • பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.
 • பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.
 • சர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.

Sharing is caring!