அழகை கெடுக்கும் தழும்பை எளிய முறையில் மறைய வைக்கனுமா?

சரும அழகை கெடுப்பதில் தழும்புகளுக்கும் மிகப்பெரிய பங்குண்டு என்றே சொல்லாம்.

ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன.

இவை சருமத்தில் ஒட்டுமொத்த அழகையையும் பாழாக்கி விடுகின்றது.

இந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது.

தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும்.

இருப்பினும் செலவே இல்லாமல் தழுப்புகளை போக்கும் சில இயற்கை பொருட்கள் உள்ளன. வீட்டில் இருந்தப்படியே இவற்றை எளிய முறையில் போக்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கற்றாழையில் உள்ள ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் பளபளக்கும்.
  • தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.
  • எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.
  • தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
  • தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
  • ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.

Sharing is caring!