ஆண்களே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களை போக்கனுமா?

பொதுவாக பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் சற்று கடினமானதாக இருக்கும்.

ஆண்கள் எப்போழுதும் தங்களது முகம் ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அவர்களது அலச்சியம் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், முக பருக்கள், தேமல், அலர்ஜி இப்படி பலவகை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இதுபோன்ற பிரச்சினையிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அழகு குறிப்புகளை தற்போது இங்கு பார்ப்போம்.

  • 2 ஸ்பூன் கற்றாழையை அரைத்து கொண்டு அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் 2 ஸ்பூன் ஆரஞ்சு சாற்றை கலந்து கொண்டு முகத்தில் தடவவும். 15 நிமிடம் சென்று இதனை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் வராமல் அழகாக இருப்பீர்கள்.
  • 1 ஸ்பூன் பாலில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் கொடுங்கள். பிறகு முகத்தை 20 நிமிடத்திற்கு பின் கழுவி விடிவும்.
  • நெல்லிக்காயை அரிந்து, அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இதற்கு பதிலாக நெல்லிக்காய் பொடியையும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்து இதனுடன் தேன் கலந்து கொண்டு, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை நீரில் கழுவவும்.
  • 2 ஸ்பூன் தயிரை எடுத்து கொண்டு அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடத்திற்கு பிறகுமுகத்தை நீரால் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தை எப்போதும் அதிக பொலிவுடன் வைத்து கொள்ளலாம்.
  • 1 ஸ்பூன் ஆரஞ்சு மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் 2 ஸ்பூன் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

Sharing is caring!