இந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்!

நமது சருமம் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வதற்கான பல வழிகள் மற்றும் பல டிப்ஸ்களை பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் அவை அனைத்தையும் நாம் பின்பற்றுகிறோமா என்றால், நிச்சயம் இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் நேரமின்மை, சோம்பேறித்தனம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதே சமயம் நேரமின்மையால் அழகு நிலையங்களுக்கு செல்வதற்கு கூட நேரம் இல்லாமல், சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுக்காமல், தங்கள் அழகை மேக்கப் போட்டே சமாளித்து வருகிறார்கள்.

இப்படி எவ்வளவு நாட்கள் மேக்கப் போட்டு, உங்களை அழகாக காட்டுவீர்கள். ஆனால் மிகவும் எளிமையான இரண்டு பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து, முகத்தில் தடவி வந்தால், அற்புதமான உடனடி பலனைக் காணலாம். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கிற்கு அரை மணிநேரம் கூட தேவையில்லை. வெறும் 10 நிமிடங்களே போதுமானது. அது என்ன ஃபேஸ் பேக் என்று நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியென்றால் தொடர்ந்து படியுங்கள்.

அது வேறொன்றும் இல்லை, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பாதாம் மற்றும் பால் தான். இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். பாதாம் விலை அதிகமானது தான். இருப்பினும், இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம்.

சரி, இப்போது அந்த பாதாம் ஃபேஸ் பேக்கை எப்படி போடுவது என்றும், அந்த ஃபேஸ் பேக்கைப் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் காண்போம்.

தேவையான பொருட்கள்:

* பாதாம் பவுடர் – 1 டீஸ்பூன்

* பால் – 2 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் பாதாம் பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* ஒருவேளை பாதாம் பவுடர் இல்லாவிட்டால், 4-5 பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

* பின் அந்த பொடியில் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

தொடர்ச்சி…

* பின்பு அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, துணியால் சருமத்தை உலர்த்துங்கள்.

* இப்படி இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பாலால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

* சரும நிறம் மேம்படும்.

* சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

* விரிவடைந்து அசிங்கமான காணப்படும் சருமத் துளைகளை சுருங்கச் செய்யும்.

* பிரகாசமான சருமத்தைப் பெற உதவும்.

தொடர்ச்சி…

* சருமத்தில் உள்ள அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்களைப் போக்கும்.

* சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.

* முதுமைக் கோடுகள் மற்றும் சரும சுருக்கங்கள் மறையும்.

* வெயிலால் சருமம் கருமையாகாமல் தடுக்கும்.

பாதாமால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

* பாதாமில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் நிறைந்துள்ளது.

* பாதாமில் வைட்டமின் ஈ என்னும் சருமத்தின் மென்மைத்தன்மைக்குத் தேவையான சத்து அதிகம் உள்ளது.

* பாதாம் சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் பிம்பிள் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.

* பாதாம் சருமத்தில் உள்ள கறைகளைப் போக்க உதவும்.

கோடைக்காலத்தில் பயன்படுத்தலாமா?

பாதாம் ஃபேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. இந்த மாஸ்க்கை கோடையில் தினமும் பயன்படுத்தி வந்தால், சருமம் கருமையாவதைத் தடுப்பதோடு, பருக்களின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும் வெளியே வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் இறந்த செல்களின் அளவும் அதிகரித்து, சருமம் பொலிவிழந்து காணப்படுவது தடுக்கப்படும்.

Sharing is caring!