இந்த தங்க கேரட்டை வைத்தே முடி உதிர்வை தடுக்கலாம்!

இன்று மாறி வரும் சமுதாய சூழலில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளில் ஊட்டச்சத்து குறைவாகவே உள்ளது.

நமது உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து நாம் உட்கொள்ளும் உணவில் தான் இருகின்றது.

அதனால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாது நமது உடல் நல பராமரிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இதன் மூலமாக, நமது சருமத்திற்கும் உடலுக்கும் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.

தலைமுடி உதிர்வு என்னும் கொடுமையான விஷயம் எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். மாசு படிதல், சுகாதாரமற்ற வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களின் காரணமாக முடி உதிர்வு, கரடுமுரடான வறண்ட முடி போன்ற தலைமுடிப் பிரச்சனைகள் உருவாகுகின்றது.

உங்கள் முடி வலுவானதாகவும் பளபளப்பாகவும் மாறுவதற்கு நீங்கள் உங்கள் தலைமுடியை கவனமாக பராமரிக்க வேண்டும்.

பச்சை காய்கறிகளில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. எவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு இந்த காய்கறிகள் பயன்படுகிறதோ, அதே போன்று இவை முடியின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

தங்க காய்கறி கேரட்..!
  • பொதுவாக இந்த கேரட்டை தங்கத்திற்கு ஈடாகவே கருதுவார்கள்.
  • பார்ப்பதற்கு ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் இந்த கேரட் பல்வேறு நலன்களை தனக்குள்ளே வைத்திருக்கிறது.
  • இதில் வைட்டமின் எ, பி, சி, பாஸ்பரஸ், மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை முடியின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடியின் வளர்ச்சியை பெருக்கும்.
முடி உதிர்வதை நிறுத்த…
தேவையான பொருட்கள்

1 வெங்காயம்

1 கேரட்

2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை எண்ணெய்

செய்முறை

இந்த ஹேர் மாஸ்க் செய்ய, முதலில் கேரட் மற்றும் வெங்காயத்தை நன்றாக நறுக்கி அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் சேர்த்து தலையில் தடவவும்.

பின் சிறிது ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று வழுக்கை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம்.

Sharing is caring!