இயற்கை முறையில் முகம் பளிச்சிட வேண்டுமா?

இன்றைய கால பெண்கள் முக அழகிற்காக அதிகம் நேரம், பணத்தையும் செலவு செய்து முக அழகினை தக்கவைத்து கொள்வதுண்டு.

இருப்பினும் கெமிக்கல் கலந்த கலவைகளை முகத்திற்கு பூசுவதனால் வயதாக வயதாக பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அதுமட்டுமின்றி அன்றாடம் வெளியில் சென்று வந்ததும் வெளியிலிருக்கும் தூசு, மாசு, அழுக்குகள் முகத்தில் சருமத்தில் ஒட்டிக்கொள்கின்றது.

அவை கண்ணுக்குத் தெரியாமல் சரும துவாரங்களில் அடைத்து விடுகின்றது. இதனால் முகம் பொலிவிழந்து போய்விடுகின்றது.

இதற்கு கண்ட கண்ட கெமிக்கல் கலவைகளை பூசுவதை நிறுத்தி விட்டு இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு முகத்தை பளிச்சிட செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது இயற்கை முறையில் முகத்தை பளிச்சிட செய்யலாம் என பார்ப்போம்.

  • பசும்பாலை நன்றாக காய்ச்சும் போது வரும் பாலாடையில் மஞ்சள்தூளைக் கலந்து நன்றாகக் குழைக்கவும். இதனை முகத்தில் கீழிருந்து மேலாக மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவலாம். தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவடையும்.
  • தவிட்டுடன் சர்க்கரை கலந்து ஸ்க்ரப் போல பயன்படுத்தினால், மூக்கின் நுனியில் உள்ள கரும்புள்ளிகள் வேரோடு வெளியேறும் மூக்கு அழகாக இருக்கும்.
  • பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு, வாழைப்பழங்களைக் கூழாக்கி பாலடைக் கலந்தும் முகத்துக்கு ப்ளீச் செய்யலாம். ப்ளீச் செய்வதற்கு முன்பு முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவவும். ப்ளீச் செய்யும் போது முகத்துக்கு மட்டும் போடாமல் கழுத்துக்கும் போடுவது நல்லது.
  • 15 நாட்களுக்கு ஒருமுறை ஆவி பிடித்தல் சருமத்துக்கு நல்லது. சூடான நீரை அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஒரு போர்வைக்குள் முகத்தையும் வெந்நீர் பாத்திரத்தையும் மூடி வெளிவரும் ஆவியை முகத்தின் மீது நன்றாக படும்படு காண்பிக்க வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். மெல்லிய துணியால் அழுந்த துடைத்ததும் மூக்கில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.
  • சுத்தமான கடலை மாவில், கெட்டியான பசுந்தயிர் கொண்டு நன்றாக குழைத்து முகத்தை கழுவி ஃபேஸ் பேக் போட்டு அரைமணிநேரம் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் முகம் பளிச். தொடர்ந்து இதை செய்துவந்தால் எப்போதும் மென்மையான அழகான சருமத்தை பெறலாம்.

Sharing is caring!