இளமையான சருமத்தை பெறும் ரகசியம்

நாம் அனைவருமே ஏதாவது ஒரு சமயத்தில் நமது சருமத்தை சரியாக கவனிக்கமுடியவில்லையே என கவலைப்பட்டிருப்போம் மெத்தனமான சரும பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுமாராக சிலர் பராமரிப்பார்கள் ஆனால் சிலருக்கோ அதற்கான சூழலே இருக்காது.

அப்படி யார் இருப்பார்கள்? என்று நீங்கள் கேட்கலாம். மாசு மற்றும் வெய்யிலில் வேலை செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள், கடுமையான அந்த சூழலினால் சரும பாதிப்புக்கு உள்ளாவர். அவ்வாறு பாதிக்கப்பட்டோர் அதனை சரி செய்வதற்கான ஒரே வழி முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றுவது தான்.

இளமையான சருமத்தை பெறும் ரகசியம்

சரும பராமரிப்பு என்பது சிலருக்கு கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் எந்த வேலையை செய்பவராக இருந்தாலும், சூரியனின் உஷ்ண தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாதுவதில்லை. இந்த பாதிப்பினை முதலிலேயே கவனிக்காவிட்டால் அது நிரந்தரமான ஒன்றாகிவிடும். எப்போதுமே பிசியாக இருக்கும் சில நிபணர்களிடம் நாங்கள் பேசினோம், அவர்கள சில அற்புதமான அறிவுரைகளை (நடைமுறைக்கு சாத்தியமானவையும் கூட!!) உங்களுக்காக வழங்கினார்கள்! அப்படி என்னதான் கூறினார்கள் என்று இங்கே காண்போம்.

நல்ல முகப்பூச்சு தேவை!

பெயர்: ஜஸ்வீன் கவுர்

வயது: 25

தொழில்: உதவி இயக்குனர்

உதவி இயக்குனராக பணிபுரியும் ஜஸ்வீன் கௌரிடம் அவரது சரும பராமரிப்பு வழிமுறைகள் பற்றி கேட்டோம். வேலை அழுத்தம் காரணத்தால் அவரது சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தனது சருமத்தை சுத்தம் செய்ய அவர் கற்றாழை ஜெல்லை சிறிது நீருடன் கலந்து தினசரி ஃபேஸ் கின்சராக பயன்படுத்துவதாகவும் அதன் மூலம் தனது சருமம் அனைத்து விதமான பாதிப்புகளில் இருந்தும் நிவாரணம் பெறுவதாக கூறுகிறார். வெளியில் கிளம்புவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னர் தவறாமல் சன்ஸ்கிரீன் பூசுவதாகவும் அவர் கூறுகிறார்.

சரும பாதுகாப்பு பொருட்களை பொறுத்த வரை அவர், “பாரம்பரியமாக அழகுக்காக பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களையே பயன்படுத்துவேன் ஏனெனில் அவை பாதுகாப்பான மற்றும் இயற்கையான சரும பாதுகாப்புக்கு சிறந்த வழி. காஸ்மெட்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் அலர்ஜி அல்லது சருமத்துக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் இயறகையான பொருட்களை பயன்படுத்துகையில் அந்த கேள்விக்கே இடமில்லை.” என்று கூறுகிறார்.

இந்த அறிவுரையை சேமித்து வையுங்கள்

நீங்கள் நினைக்கலாம் வங்கியில் வேலை செய்தால் நாள் முழுவதும் ஆபீசுக்குள்ளேயே அமர்ந்திருக்கலாம் மற்றும் சரும பாதிப்புகள் மற்றும் மாசுகளில் இருந்து தப்பிக்கலாம் என்று. ஆனால் எப்போதும் அப்பபடி இருக்க முடிவதில்லை!

பயனுள்ள அறிவுரையை வழங்கும் இந்த பேங்க்கர் கூறுவதை பாருங்கள்

பெயர்: வைஷாலி சேத்

வயது: 37

தொழில்: தனியார் வங்கி புரொஃபஷனல்

வைசாலி சேத், தனியார் வங்கியில் பணிபுரியும் இவர், பேங்கிங் மற்றும் ஃபைனான்ஸ் சவால்களை எதிர்கொள்வதுடன், அவரது வேலையின் அழுத்தம் சருமத்தை பாதிக்காமல் இருக்க, தான் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டியுள்ளது என்று கூறுகிறார்.

பணி நிமித்தமாக நகரம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தனது சருமத்தை நன்றாக பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு இருப்பதாக அவர் கூறுகிறார் “எனது சருமத்தில் தூசி மற்றும் வெயிலின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. எனவே சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நான் தினமும் 10 கிளாஸ் நீரை அருந்துகிறேன். மேலும் மீட்டிங்குக்கு இடையே போதிய இடைவெளியில் குளிர்ந்த நீரை எனது முகம் மற்றும் கழுத்து பகுதிகளை தெளித்து சுத்தம் செய்து கொள்வேன் மற்றும் ஹெர்பல் கிளீன்சரை பயன்படுத்துவேன்.” என்று கூறுகிறார்.

மதிப்பு மிக்க ஒரு சேல்ஸ் பிட்ச்

பல்வேறு பிரிவுகளில் பணிபு அனுபவம் கொண்ட இவரது அறிவுரை மதிப்புமிக்கது. அதிக நேரத்தை வெளியில் செலவிடும் இவரது ஆலோசனையை கேளுங்கள்.

பெயர்: அங்கிதா உபாத்யா

வயது: 32

தொழில்: விற்பனை அதிகாரி

தொழில் ரீதியாக விற்பனை பிரதிநிதியாகவும் பொழுதுபோக்குக்காக டிராவல் பிளாகராகவும் இருக்கும் அங்கிதா உபாத்யா, வார நாட்களில் பெரும்பாலும் சாலைகளில் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் இவர். வார இறுதிகளில் கேம்பிங் மற்றும் டிரெக்கிங் என்று கிளம்பி விடுவாராம். நெடுந்தூர பயணம் செய்ய கிளம்பும் போது தனது பையில் சிறிது வேப்பிலையை எடுத்து சென்று குளிக்கும் நீரில் வேப்பிலை இட்டு பயன்படுத்துவதாக கூறுகிறார். வேப்பிலை ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் ஆபத்தான தொற்றுகளில் இருந்து அது தன்னை காப்பதாக கூறுகிறார். தனது சரும பாதுகாப்பு நடைமுறைகளை பற்றி அவர் கூறுகையில், “நான் அதிகம் மெனக்கெடுவதில்லை ஆனால் நான் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. மேக்கப்புடன் நான் எப்போதும் தூங்க செல்லமாட்டேன். தூங்க செல்வதற்கு முன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுவேன். வேப்பிலை அல்லது எலுமிச்சை போன்ற இயற்கையான பொருட்கள் அல்லது அவற்றின் தைலங்கள் தேடிப் பிடித்து பயன்படுத்துவேன்.” என்று அவர் கூறுகிறார். மேலும், “இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் பாதுகாப்பானவை. மிக சிறந்த பலன்களை அவை உடனடியாக தராவிட்டாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. என்னை பொருத்த வரை அது மிக அவசியம்!” என்று மேலும் அவர் கூறுகிறார். உபாத்யாயாவை பொருத்த வரையில் நம்பகத்தன்மை என்பது முக்கியமான விஷயம் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

சரியான சரும பராமரிப்பு நடைமுறை

இப்பெண்கள் அனைவரும் பயன்படுத்தும் பொதுவான சரும பாதுகாப்பு நடைமுறை என்பது தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை கவனமுடன் தேர்ந்தெடுப்பது என்பது தான். சரும பளபளப்பை பராமரிக்கவும் அதனை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், கௌர் கற்றாழையை நம்புகிறார். உபாத்யா வேப்பிலையை பயன்படுத்துவதன் மூலம் தான் எந்த நேரமும் #GoOutsideSafe க்கு தயார் என நமக்கு உணர்த்துகிறார்.

உங்களது சரும வகைக்கு பொருத்தமான இயற்கையான ஒரு பொருளை தேர்ந்தெடுக்க வேண்டியது மிக முக்கிய விதிமுறையாகும்.

தங்களது தினசரி வேலை சருமத்தை பாதிக்காத வண்ணம் சிறந்த சரும பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் இந்த பெண்களிடமிருந்து நாமும் கற்றுக் கொள்ளலாம்.

உங்களது தேவைகளான – இயற்கையான பொருள், குறைந்த விலை, தினமும் பயன்படுத்த சுலபமானது ஆகிய அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளுங்கள்!

உதாரணமாக, வேப்பிலையை எடுத்துக் கொள்வோம், அது அனைத்து சரும வகைக்கும் ஏற்றது. எளிதில் கிடைக்கக்கூடியது மற்றும் விலை குறைவானது. 100% சுத்தமான வேப்பெண்ணை எங்கு கிடக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், அதற்கு பதிலாக ஹமாம் பயன்படுத்துங்கள்.

அதில் 100% சுத்தமான வேப்பெண்ணெய், துளசி மற்றும் கற்றாழை அடங்கியுள்ளது. ரேஷ்கள், பருக்கள், உடல் துர்நாற்றம் போன்ற 10 வகையான முக்கிய சரும பிரச்சினைகளில் இருந்து ஹமாம் நிவாரணம் அளிக்கிறது. இனி எந்த சாக்குபோக்கும் தேவையில்லை!

Sharing is caring!