இளமையா, அழகா, முகப்பரு இல்லாத முகத்துக்கு இஞ்சியே போதும் !

இஞ்சி மசாலா பொருளாக இருந்தாலும் சருமத்துக்கு அழகு செய்வதிலும் குறையில்லாத பலனை தருகிறது.

இஞ்சியை எப்படியெல்லாம் முகத்துக்கு பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம்.

வயதான பிறகு வரும் முகத்தோற்றத்தைக் காட்டிலும் வயது முதிர்வுக்கு இளவயதிலேயே முகத்தில் சுருக்கமும் வயதான தோற்றமும் சிலருக்கு ஏற்பட்டுவிடுகிறது.

இஞ்சியை இந்தகைய பராமரிப்புக்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் வயதான தோற்றத்தை தடுக்க முடியும்.

இஞ்சி ஃபேஸ் பேக்

  • முகம் சுத்தமாக தெளிவாக இருக்க விரும்பினால் இஞ்சி ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். இவை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் திட்டுகள், வடுக்கள் போன்றவற்றை அகற்றி முகத்தை சுத்தமாக அழகாக வைக்க உதவும்.
  • இஞ்சியை தோல்சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, காயவைத்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். ஈரமில்லாமல் இருக்க வேண்டும். இதனுடன் பால் பவுடர் அல்லது சந்தனம் தூளை எடுத்து சம அளவு கலந்து பன்னீர் விட்டு குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகளும் கரும்புள்ளிகளும் வெளியேறும். அதிகப்படியான சரும பாதிப்பை கொண்டிருப்பவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை இதை பயன்படுத்தினாலே விரைவில் பலன் கிடைக்கும்.

எச்சரிக்கை

இஞ்சியை முகத்துக்கு பயன்படுத்தும் போது இள இஞ்சியாக இருக்க வேண்டும்.

சற்று முற்றலாக இருந்தாலும் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு.

இஞ்சி சாறுடன் பன்னீர் கலந்தும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இஞ்சி சாறை நேரடியாக சருமத்தின் மீது வைக்காமல் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குளிரவைத்த பிறகு பயன்படுத்துவது நல்லது.

Sharing is caring!