உங்களின் கூந்தல் மிகவும் அழகாகவும் அடர்த்தியாகவும் வேண்டுமா?

பெரிய வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. முடி வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

வெங்காயம் முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து தலை முடி இழந்த ஊட்டச்சத்தை திரும்ப உதவுகிறது.

சல்பர் அதிகமாக இருப்பதால் முடி உடைவதையும், அடர்த்தி குறைவதையும் தடுக்கிறது.

பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால்,உச்சந் தலையில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடுகின்றது.

வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடியின் பளபளப்பு அதிகமாகிறது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. பேன் தொல்லை குறைகிறது. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

அந்தவகையில் முடியின் அடர்த்தியை அதிகரிக்க வெங்காயச்சாற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

வெங்காய சாறு

வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின் மிக்ஸியில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு துணியில் நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின் வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும்.

விரல்களால் சுழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.

வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலையை நன்றாக அலசவும். வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.

வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்

வெங்காய சாறுடன் ஆலிவ் எண்ணெயை கலக்கவும். பின் தலையில் நன்றாக இந்த சாறை தடவி மசாஜ் செய்யவும். 2 மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும்.

இதனை தொடர்ந்து செய்வதால் வலிமையான மற்றும் பொடுகு இல்லாத கூந்தலை பெறலாம்.

வெங்காய சாறுடன் தேன்

கால் கப் வெங்காய சாற்றை எடுத்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனை இந்த சாறுடன் கலக்கவும்.

இந்த சாறை எடுத்து தலையிலும் வேர்கால்களிலும் நன்றாக தடவவும். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்

வெங்காய சாறுடன் கறிவேப்பிலை

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையின் பயன் மிகவும் அதிகம். முடி வளர்ச்சியை அதிகரித்து , வலுவான மற்றும் கருமையான முடியை தருகிறது.

ஒரு கை கறிவேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். இரன்டு டேபிள் ஸ்பூன் வெங்காய சாறுடன் இந்த பேஸ்டை கலக்கவும்.

இந்த பேஸ்டை தலையில் தடவி 1மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஷாம்பூவால் தலையை அலசவும்.

Sharing is caring!