உங்களுக்கு அழகை அள்ளித்தரும் ஸ்ட்ராபெர்ரி!

நமக்கு தேவையான ஏராளமான விட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்தான். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்ட் என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ர்பெர்ரியின் நன்மைகள்

  • சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு இருக்கின்றன. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் ஸ்ட்ராபெரிக்கு உள்ளது.
  • வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் ஸ்ட்ர்பெர்ரி பாதுகாக்கின்றன.
  • ஆன்டி-ஆக்சிடன்டுகள் ஸ்ட்ராபெரியில் இருப்பதால், இவை தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
  • ஸ்ட்ராபெரியில் விட்டமின் சி, ஏ, கே, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், டோக்கோபெரால் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து காணப்படுகின்றன.
  • ரத்த அணுக்களை உற்பத்தி செய்து புற்றுநோய் வரமால் உடலை பாதுகாக்கின்றன.
  • ஸ்ட்ராபெரியில் பல அமிலங்கள் இருப்பதால், இந்த பழத்தினை ஜூஸ் செய்து குடித்தால், பற்களில் உள்ள கரைகள் எடுத்து வெள்ளையாக மாற்றி விடும்.
  • பெண்களின் அழகை பாதுகாக்கவும் இந்த பழம் பயன்படுகின்றன. சருமத்தின் நிறத்தினை மாற்றி பொலிவுடன் வைக்க இப்பழம் பெரிதும் உதவி செய்யும்.
  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து கிருமி தொற்று நோய்கள் உண்டாவதை இப்பழம் தடுத்து நிறுத்துகிறது.
  • செரிமான மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்கச் செய்து, இதயத்தின் செயல் திறனையும் கூட்டும்.

Sharing is caring!