உங்கள் உதடு செக்கச் சிவப்பாக மாறணுமா?

பொதுவாக முகம் பார்க்க நல்ல வெள்ளையாக இருந்தாலும் உதடு கருமையடைந்து காணப்படுவதுண்டு.

உதடு கருமையடைய முக்கிய காரணமே முகத்திற்கு கண்டண கெமிக்கல் கலந்த கிறீம்களை வாங்கி உபயோகிப்பது தான்.

மரபியல் காரணம் ரத்தசோகை அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர் லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை இதுவும் உதடு கருமையடைய காரணமாகும்.

அதுமட்டுமின்றி புகைப்பழக்கம் சூரிய கதிர்களின் தாக்கம் விட்டமின் குறைபாடு அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது மருந்துகள் ஹார்மோன் பிரச்சனை உதடு பராமரிப்பின்மை ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது.

அந்தவகையில் கருமையுடன் காணப்படும் உதட்டை எப்படி செக்கச் சிவப்பாக மாற்றுவது என இங்கு பார்ப்போம்.

  • பீட்ருட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.
  • உதடு காய்ந்திருக்கிறதா என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.
  • கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் படுக்கைகுச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
  • கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிரந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது.
  • ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து பளபளப்பாக காட்சியளிக்கும்.
  • பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.
  • தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும்.
  • உதட்டில் அரை ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு சிவப்பாகும்.

Sharing is caring!