உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள வேண்டுமா?

வெண்ணையில் மிக அதிக அளவில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்து உள்ளது.

இது சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் இது உங்கள் சருமத்தினை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மற்றும் ஒளிரும் தன்மையுடையதாகவும் மாற்றும் பண்பினை கொண்டுள்ளது.

அந்தவகையில் முக அழகினை பெற வெண்ணையை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

வெண்ணெய் மற்றும் வாழைப்பழம்

ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய், வாழைப்பழத்தை எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் பட்டர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த கலவையை ஒரு பிரஷ்சினை பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள்.

இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் வெண்ணெய்

½ வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் எடுத்து, வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது கலவையை எடுத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவுங்கள்.

இந்த முறையை நீங்கள் வாரத்தில் 2 முதல் 3 முறை செய்தால் விரைவில் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தினை பெறலாம்.

ரோஸ் வாட்டர் மற்றும் வெண்ணெய்

ஒரு தேக்கரண்டியளவு ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் எடுத்து ஒரு சுத்தமான கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து காட்டன் பஞ்சினை எடுத்து கொள்ளுங்கள்

அதில் நனைத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள்.

இந்த முறையை நீங்கள் வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம். இவற்றுள் எது உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றோ அதனைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

Sharing is caring!