உங்கள் சரும அழகைத் தக்க வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

பரபர வாழ்க்கைச்சூழலில் பல பெண்களுக்கும் சருமப் பராமரிப்புக்கான நேரம் கிடைப்பதில்லை. காலை முதல் இரவு வரை சருமப் பராமரிப்பில் கவனம் தேவை. குறிப்பாக, பகலைவிடவும் இரவில் சருமப் பராமரிப்பு மிக முக்கியம். ‘உறங்கச் செல்வதற்கு முன் சில விஷயங்களைச் செய்து பழகினால், சரும அழகைத் தக்கவைத்துக்கொள்ளலாம்’

சரும ஆரோக்கியத்துக்கு முதல் தேவை, ஏழிலிருந்து எட்டுமணி நேரம் ஆழ்ந்த தூக்கம். இரவில் அலைபேசித் திரை, கணினித் திரை, நைட் லேம்ப் என எந்த ஒளியுமற்ற இருட்டான அறையில் தூங்க வேண்டும். ஏனெனில், இருளில்தான் ‘மெலட்டோனின்’ (Melatonin) ஹார்மோன் உருவாகும். மனிதர்களின் உறக்க – விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் முக்கிய ஹார்மோன் இது.

பகல் நேரத்தில் முடியவில்லை என்றாலும், இரவில் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அது சருமத்துக்குப் பொலிவைத் தரும். பாதாம் போன்ற நட்ஸ் சாப்பிடுவதோடு, மருத்துவர் பரிந்துரையுடன் மல்டி வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

மேக்கப்பை நீக்காமல் இரவு அப்படியே படுக்கையில் சரிவது தவறு. ஃபவுண்டேஷன் முதல் பவுடர் வரை செய்துகொண்ட மேக்கப், சருமத் துவாரங்களில் அடைத்துக்கொண்டு சுவாசிக்கத் தடையாக அமையும். எனவே, முகத்தைக் கழுவிய பின்னரே உறங்கச் செல்ல வேண்டும்.

Sharing is caring!