உங்கள் முடி உதிர்வதை போக்கும் பொன்னாங்கண்ணி தைலம்

இன்று பலரும் முடி உதிரும் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர், இதற்கு தீர்வாகிறது பொன்னாங்கண்ணி கீரை.

இதை வைத்து தைலம் எப்படி தயாரிக்கிறது என பார்ப்போம்.

தேவையானவை

  • பொன்னாங்கண்ணிக் கீரை – அரை கிலோ (இரண்டு கட்டு வரலாம்)
  • நல்லெண்ணெய் – கால் கிலோ
  • தேங்காய் நெய் – கால் கிலோ
  • விளக்கெண்ணெய் – 150 கிராம்

செய்முறை:

  • முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, உரலில் சுத்தமாக இடித்து ஒட்டச் சாறு பிழிந்து கொள்ள வேண்டும்.
  • சாறு ஒரு டம்ளர் வரை தாராளமாக வரும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.
  • பிறகு சாற்றை ஒரு தட்டிலிட்டு வெயிலில் உருட்ட வரும் பதம்வரை காய வைத்து, மெல்லிய வடைபோல தட்டிக்கொள்ள வேண்டும்.
  • தட்டவராது போனால் கெட்டிக் குழம்பாய் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு மூன்று எண்ணெய்களையும் ஒன்று சேர்த்து, இக்கீரை வடையை அல்லது குழம்பைச் சேர்த்து நிதானமாக தணலில் காய்ச்சவும் (தாமிர பாத்திரம் மிக நல்லது அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரம் நல்லது).
  • அந்த எண்ணெய் பொங்கும், இறக்கி விடவும். நுரை அடங்கி கீரைச்சாறு கசண்டாக அடியில் படியத்தொடங்கியவுடன், எண்ணெய் தெளியத் தொடங்கிவிடும்.
  • எண்ணெய் தெளிந்து ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி போத்தலில் நிரப்பி காலையில் சூரியன் உதிக்க முன்னரும், மாலையில் சூரியன் அஸ்தமித்த பின்னரும் உபயோகிக்க வேண்டும்.
  • வியர்வையில் இதனை உபயோகிக்க கூடாது.
    இத்தைலம் முடிகொட்டுவதைத் தவிர்த்து, கூந்தலை நல்ல கருமையாக்குவதோடு, கண்ணுக்கும் மூளைக்கு குளிர்ச்சி தரும். இதனை தடிமன், காய்ச்சல் நேரங்களில் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல.

Sharing is caring!