உங்கள் விரல் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள ஆசையா?

நீங்கள் என்னதான் உங்கள் முகத்திற்கு மேக்கப் போட்டு அழகு படுத்தினாலும் மற்றவர்களிடம் உங்களை அறிமுகப்படுத்தும் போது முதலில் நீட்டுவது உங்கள் கைகளைத் தான். எனவே உங்கள் அழகில் கைகளின் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது. நம் கைகளுக்கு மிகுந்த அழகு சேர்க்கும் விஷயம் என்றால் அது நம் நகங்கள் தான்.

நகங்களின் அழகு நம் அழகை மட்டும் காட்டுவதோடு நம் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. அடிக்கடி நகங்களை பராமரிக்க வேண்டும் என்றாலே நாம் பியூட்டி பார்லருக்கு தான் ஓட வேண்டியிருக்கும். ஆனால் அதெல்லாம்
தேவை இல்லைங்க. உங்கள் வீட்டிலேயே உங்கள் நகங்களை மினுமினுக்க செய்துவிடலாம்.

பூஞ்சைத்தொற்று நகங்களில் பூஞ்சை தொற்றால், அதிக நெயில் பாலிஷ் அப்ளே செய்வதால் ஏற்படும் மஞ்சள் கறைகளை கூட நீக்கி எளிதாக பாலிஷ் செய்து விடலாம். இதற்காக ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் அடங்கிய பேக்கிங் சோடா, லெமன் ஜூஸ் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். சரி வாங்க உங்க நகங்களை எப்படி பால் போன்று பளபளக்க வைக்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவின் வொயிட்டனிங் பொருட்கள் நகங்களை அழகாக பாலிஷ் ஆக்கி விடுகிறது. பயன்படுத்தும் முறை 1/2 டீ ஸ்பூன் பேக்கிங்
சோடாவை 2-3 டீ ஸ்பூன் டிஸ்டில்டு
வாட்டருடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை நகத்தில் தடவி சில நிமிடங்கள் உலர வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வொயிட் வினிகர் நகங்களில் ஏற்பட்டுள்ள நிற மாற்றத்தை போக்கி, அழுக்குகளையும் சேர்த்து வெளியேற்றி, பளபளப்பை தருகிறது. பயன்படுத்தும் முறை 1/2 டீ ஸ்பூன் வொயிட்
வினிகரை ஒரு பெரிய பெளல் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அதில் நகங்களை 5-10 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு
வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றிற்கு எதிராக செயல்படுகிறது. பயன்படுத்தும் முறை ஆலிவ் ஆயிலை நகங்களில் நன்றாக தடவி 20-25 நிமிடங்கள் கழித்து லேசான க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும்.

ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டர் நகங்களில் ஏற்பட்டுள்ள நிற மாற்றத்தை போக்கி நகங்களை மினுமினுக்க வைக்கிறது. பயன்படுத்தும் முறை ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து நகங்களில் தடவிக் கொள்ளுங்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை செய்து
வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

லெமன் ஜூஸ் நகங்களில் ஏற்பட்டுள்ள கறைகளை போக்க லெமன் ஜூஸ் முக்கிய பங்காற்றுகிறது. பயன்படுத்தும் முறை 2 டீ ஸ்பூன் லெமன்
ஜூஸை எடுத்து ஒரு பெரிய பெளல் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அதில் 5-10 நிமிடங்கள் நகங்களை ஊற வைக்கவும்.பிறகு
வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வெள்ளரிக்காய் அடிக்கடி உடைந்து போகும் நகங்களையும், நகத்தில் ஏற்படும் நிற மாற்றத்தை போக்கவும் வெள்ளரிக்காய் பயன்படுகிறது. பயன்படுத்தும் முறை வெள்ளரிக்காய் துண்டுகளை நன்றாக மசித்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை நகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்கவும்.

பயன்படுத்தும் முறை
1/2 டீ ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை 1 டேபிள் ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டருடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை நகத்தில் தடவி கொள்ளவும். இதை
10-15 நிமிடங்கள் நன்றாக உலர வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Sharing is caring!