உங்க நகத்தை சுற்றி கருமை இப்படி அசிங்கமாக இருக்கா?

பொதுவாக சிலருக்கு நகத்தை சுற்றி கருப்பு வளையங்கள் அசிங்கமாக காணப்படுவதுண்டு. இது நகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றது.

இதற்காக அழகு நிலையங்களுக்கு தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிய முறையில் இதனை போக்க முடியும்.

அந்தவகையில் தற்போது இந்த கருப்பு வளையங்களை எளிதில் போக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • தக்காளியை இரு துண்டுகளாக நறுக்கி நகங்களை சுற்றி தேய்த்தால் கூட போதும். சிறந்த பலனை பெற, தக்காளி பேஸ்டை இரவு தூங்குவதற்கு முன்பு நகத்தை சுற்றி போட்டு விட்டு, இரவு முழுவதும் விட்டுவிடவும். காலை எழுந்து அதனை கழுவி விடவும். மேலும், தக்காளியை துண்டுகளாக நறுக்கி, அதன் மீது சர்க்கரையை தூவி, நகத்தை சுற்றி தேய்க்கும் போது, இறந்த செல்களை நீங்கி, கருப்பு தோல் உரிந்து, நகத்தை அழகாக்கும்.
  • முகத்திற்கு கற்றாழை ஜெல்லை தேய்ப்பது போலவே, நகங்களை சுற்றியும் தேய்க்க வேண்டும்.
  • மஞ்சள் தூளில் சிறிது நீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல கலந்து, நகங்களை சுற்றி போடவும். இந்த கலவையுடன் ஆலிவ் ஆயிலை கலந்து பயன்படுத்துவது மேலும் சிறந்தது. நகம் கடிக்கும் பழக்கும் உள்ளவர்கள் நிச்சயம் இதனை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நகத்தை தொடர்ந்து கடிப்பதால் நகங்கள் சுற்றிலும் இருக்கக் கூடிய எரிச்சல் நீங்கிவிடும்.
  • தயிரை கை விரல்களில் கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், தயிருடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.

Sharing is caring!