உங்க முகத்தில் அசிங்கமாக தோல் உரிய ஆரம்பிக்கிறதா?

பொதுவாக சிலருக்கு குளிர்காலங்களில் முகத்தில் தோல் உரிவதுண்டு. இதனால் முகம் பாரக்கவே அசிங்கமாக காணப்படுபதுண்டு.

முக சருமம் உரிதல் என்பது மிகவும் வலியை ஏற்படுத்தும் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று.

அதிகப்படியான புறஊதா கதிர்வீச்சால் உங்கள் தோல் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் தோலை சேதப்படுத்தி முக சருமம் உரிதலை ஏற்படுத்தும் காரணங்களாக அமையும்.

இதனை இயற்கை முறையில் போக்க என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

  • தயிரை தினமும் சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், தோல் உரிதலுக்கு காரணமான நுண்ணுயிரிகளை அழித்து, தோல் உரிதலைத் தடுக்கும். மேலும் தயிர் சருமத்தின் அழகை அதிகரித்து வெளிக்காட்டும்.
  • வெறும் ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யலாம் அல்லது வாரம் 2-3 முறை ஆலிவ் ஆயிலில், ரோஸ் வாட்டர், சிறு துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் மாஸ்க் போடலாம்.
  • கற்றாழை ஜெல்லை வறட்சியான சருமத்தினர் தங்கள் சருமத்தில் பயன்படுத்தினால், அவை வறட்சியை போக்குவதுடன், சருமத்தில் எண்ணெய் பசையை தங்க வைப்பதுடன், இரத்த ஓட்டம் சீராக செல்லவும் உதவி புரியும்.
  • இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து உறங்கினால், தோல் உரிவது குறைந்து, சரும வறட்சியும் நீங்கும்.
  • வாழைப்பழத்தை மசித்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், சருமத்தில் உள்ள வறட்சி நீங்குவதுடன், சருமம் மென்மையாக இருக்கும்.
  • நல்லெண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும், தோல் உரிவது நின்றுவிடும். மேலும் இதனைக் கொண்டு வாரம் ஒருமுறை உடல் முழுவமும் இந்த எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து குளித்தால், அவை சரும வறட்சியை போக்குவதுடன், தோல் உரிவதையும் தடுக்கும்.
  • தேனை தோல் உரியும் இடத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அவை விரைவில் குணமாகிவிடும்.
  • விளக்கெண்ணெயில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், இதனை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், அவை பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்து, வறட்சியை நீக்கி, தோல் செதில்செதிலாக வருவதைத் தடுக்கும்.
  • ஆப்பிளை அரைத்து கூழாக்கி, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சரும வறட்சி நீங்கும்.
  • பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் படுக்கும் போது மசாஜ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பாதாம் இலையினை அரைத்து, அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால், வறட்சியினால் ஏற்பட்ட காயங்களையும், வலியையும் உடனே போக்கலாம்.

Sharing is caring!