உங்க முகத்தில் இப்படி பொரி பொரியா இருக்கா ?

கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் சரும பிரச்சினைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும்.

அதிலும் சிலருக்கு முகத்தில் சிறு சிறு பொரிகள் இருக்கும்.கூந்தலின் கடினம் சருமத்தில் பாதிப்பேற்பட்டு இது போல் தோன்றுகிறது.

இதற்கு காரணம் முகத்தில் படும் முடிக்கற்றைகளால் உண்டாகும் அலர்ஜிதான்.

இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்துவிட்டால் இவை பெரிதாகாமல் பார்த்துகொள்ளலாம்.

அந்தவகையில் இதனை போக்கும் சில இயற்கை முறைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • கற்றாழையை முள்நீக்கி நீரில் ஊறவைத்து எடுக்கவும். பின் எடுத்தால் அதில் இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து நீர் விடாமல் மிக்ஸியில் குழைத்து நெற்றி பகுதியில் முகத்தில் தடவி வர வேண்டும். அவை காய்ந்ததுல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் பொரி போன்ற சருமம் நீங்கி பளிச் என்று ஆகும்.
  • கோதுமை அரை டீஸ்பூன் அளவுக்கு மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து நெற்றிபகுதியில் தடவ வேண்டும். இதனால் சருமத்தில் பொரி பொரியால் உண்டான எரிச்சல் அடங்கும். இதை பேக் போடும் போது நெற்றியிலிருந்து நன்றாக தலையின் மேற்புறம் வரையில் போட வேண்டும்.
  • முல்தானி மெட்டி பவுடர் எரிச்சலை உண்டாக்காமல் இருக்க அதனுடன் பன்னீர் சேர்த்து குழைத்து நெற்றி மீது பற்று போடலாம். பிறகு காய்ந்ததும் குளிர்ந்தநீரை கொண்டு கழுவி கற்றாழை அல்லது பன்னீர் தொட்டு தடவ வேண்டும். இதனால் எண்ணெய் பசையால் வரக்கூடிய பொரி போன்ற பிரச்சனை சரியாகும்.
  • தினமும் இரவு படுக்கும் முன்பு விளக்கெண்ணெயை இலேசாக சூடு செய்து பொரி பொரியாக இருக்கும் இடங்களில் மட்டும் தேய்க்க வேண்டும். தொடர்ந்து இப்படி செய்துவந்தாலே இரண்டு வாரங்களில் இந்த பிரச்சனை முற்றிலும் போகும். எண்ணெய் வாங்கும் போது மட்டும் தரமானதாக பயன்படுத்துங்கள்.
  • பேக்கிங் சோடாவுடன் பன்னீர் அல்லது கற்றாழை சேர்த்து நன்றாக குழைத்து பொரி பொரியாக இருக்கும் இடங்களில் மட்டும் பேக் போடுங்கள்.

Sharing is caring!