உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு தேவையற்ற முடிகள் ஹார்மோன் சம நிலையற்ற தன்மையாலும் பரம்பரை காரணமாகவும் கைகால் மற்றும் முகத்தில் உருவாகுகின்றது.

இதனை அகற்ற மாதம் இருமுறை அழகு நிலையங்களுக்கு செல்வது வழக்கமாகும்.

இதனால் பண செலவும் நேரமும், விரயமும் தான் அதிகம்.

இவற்றை இயற்கை முறைகளின் மூலமும் அகற்ற முடியும். இதற்கு நமது சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது. தற்போது அவற்றை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • மைதா மாவை முகம், கைகளில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவினால் நாள்ளடைவில் முடி வளர்ச்சி குறைவதை தடுக்கலாம்.
  • கோதுமை மாவை சலித்தபின் வரும் தவிட்டைக் கொண்டு உடல் மற்றும் முகத்தில் தேய்த்து கழுவினால் விரைவில் முடி பலவீனமாகி உதிர்ந்துவிடும். முடி வளர்ச்சியும் தடுக்கும்.
  • பப்பாளி சதைப்பகுதியுடன் மஞ்சள் சேர்த்து பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். விரைவில் முடி வளர்ச்சி குறையும்.
  • உலர்ந்த பிரஷைக் கொண்டு உடலில் தேயுங்கள். இவை படிப்படியாக முடி வளர்ச்சியை குறைக்கும். அதோடு தழும்புகள், மருக்களும் மறையும்.
  • அரிசி மாவு மிக திடமான முடிகளையும் அகற்றும் . அரிசி மாவுடன் சிறிது நீர் கலந்து முடி உள்ள இடங்களில் தேய்க்கவும். 10 நிமிடங்கல் கழித்து கழுவுங்கள்.
  • சோள மாவும் சிறந்த முறையில் முடி வளர்ச்சியை தடுக்கும். தினமும் காலை மாலை என இரு வேளை உபயோகித்துப் பாருங்கள்.

Sharing is caring!