என்ன செய்தாலும் முடி உதிர்ந்துகொண்டே இருக்கிறதா?

பல ஆராய்ச்சியாளர்கள் மீன் எண்ணெய்யை ஒரு சிறந்த கூந்தல் பராமரிப்பு உணவாக கூறுகின்றனர். இவை கூந்தலின் வேர்க்கால்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தலை ஆரோக்கியமாக மாற்றி, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுகிறது.

மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கூந்தலின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது.

* மீன் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உச்சந்தலையை கிருமி மற்றும் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

* வயது முதிர்வின் காரணமாக உண்டாகும் நரை போன்ற பாதிப்புகளைத் தடுக்க மீன் எண்ணெய் உதவுகிறது.

* ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக உண்டாகும் கூந்தல் சேதங்களைக் குறைக்க மீன் எண்ணெய் உதவுகிறது.

* முடி உதிர்வுக்கான டெலோஜன் காலகட்டத்தைக் குறைத்து முடி இழப்பைக் குறைக்க உதவுகிறது மீன் எண்ணெய் .

* முடி இழப்பை தூண்டும் ஹார்மோன்களை தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உதவுகின்றன.

* கூந்தல் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை மீன் எண்ணெய்யில் உள்ளது.

* செபம் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தி, உச்சந்தலையில் எண்ணெய் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

* முடி மெலிதாவதைத் தடுக்க மீன் எண்ணெய் உதவுகிறது.

மீன் எண்ணெய்க்கான ஊட்டச்சத்தை உடலில் சேர்த்துக் கொள்ள மற்றொரு வழி மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்வது. மீன் எண்ணெய் மாத்திரை மற்றும் மீன் எண்ணெய் அடர் திரவம் ஆகியவை இரண்டு வகையான வடிவங்களாகும்.

இவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Sharing is caring!