என்றும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா?

இன்றைய காலத்தில் இளம் வயதினர் விரைவில் முதுமையானவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர்.

இப்படி காட்சியளிப்பதற்கு சரும பராமரிப்புகளும், உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

இதில் முக்கியமாக பெண்கள் தான் விரைவில் முதுமையானவர்கள் போன்று காணப்படுகின்றனர். இதற்கு அவர்கள் தங்களின் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை கொடுக்காதது தான் காரணம்.

இதற்கு போக்க ஒவ்வொருவரும் தங்களின் சருமத்தைப் பராமரித்தால் தான் இளமைத் தோற்றத்தைப் பாதுகாக்க முடியும்.

அந்தவகையில் முகத்தில் உள்ள முதுமை தோற்றத்தை போக்கி முகம் பளபளப்பாக மாற என்ன வலிமுறைகளை பின்பற்றலாம் என பார்ப்போம்.

  • சிறிது நற்பதமான எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், ஒரு நல்ல வித்தியாசத்தைக் காணலாம்.
  • துருவிய தேங்காயை அரைத்து பால் எடுத்து, அந்த பாலை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.
  • வெள்ளரக்காயை அரைத்து அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.
  • ரோஸ்வாட்டரை கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாற்றோடு சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தினமும் இரவு தூங்கும் முன் தடவி வந்தால், மறுநாள் முகம் நன்கு புத்துணர்சியுடன் பொலிவோடும் இருக்கும்.
  • பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப்பொருள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் நெகிவுத்தன்மையையும், அழகையும் அதிகரித்து காட்சியளிக்கும்

Sharing is caring!