எளிய அழகு குறிப்புகள்

* கழுத்து கருப்பு போக முட்டைகோஸ் சாறு,எலும்பிச்சை சாறு, தேன் முன்றையும் கலந்து கழுத்தில் பூசிவர கழுத்து கருப்பு மறைந்து விடும்

* முகபரு வராம்ல் இருக்க மாலையில் 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு ஊற வைத்து அந்த தண்ணீரில் காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது. முகம் பளிச்சிடும்.

* முடி கருப்பா அடர்த்தியாக  வளர  கறிவேப்பிலை, மருதாணி அரைத்து நிழலில் காய வைத்து அதனுடன் வெந்தயம்,செம்பரத்திபூ(காயவைத்தது)  இவற்றையெல்லாம் எண்ணெயில் ஊர வைத்து  தினமும் தேய்த்து வெந்தால் முடி நன்கு வளரும்.

* முகச்சுருக்கம் மாற வெள்ளரி 2  துண்டு, நாட்டு தக்காளி 1 பழம், புதினா சிறிதளவு, மூன்றையும் பேஸ்டாக்கி முகத்தில் பூசி வர முகசுருக்கம் மாறி விடும்.

Sharing is caring!