ஒரு பைசா கூட செலவில்லாமல் இயற்கை முறையில் நீண்ட தலைமுடியை பெற வேண்டுமா?

தலைமுடி உதிர்வை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். தலைமுடி வேர்க்கால்கள் வலுவிழந்து போகும் போது தான் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது.

தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஷாம்பூக்களில் இருந்து வீட்டு வைத்தியம் வரை பல விஷயங்களை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள்.

ஆனால் சாதாரணமாக சமையலில் நாம் பயன்படுத்தும் இலைகள் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும். உணவின் சுவையை கூட்ட பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையை பற்றி தான் பேசுகிறோம்.

பெரும்பாலானோர் வீட்டில் கறிவேப்பிலை மரம் காணப்படும். செலவே இல்லாமல் சுலபமான முறையில் தலைமுடி உதிர்வை சரி செய்ய இந்த இலைகள் உங்களுக்கு பயன்படும்.

தலைமுடியில் பல அதிசயங்களை நிகழ்த்தி முடி வளர்ச்சியை தூண்டுகின்ற பொருட்கள் அனைத்தும் கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது.

கறிவேப்பிலை பேஸ்
  • கறிவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் கொண்டு ஒரு அற்புதமான தலைமுடி மருந்தை தயாரிக்கலாம்.
  • நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டும் தலைமுடியை அற்புதமாக வளரச் செய்யும்.
  • இவை இரண்டையும் சேர்த்து கறிவேப்பிலையோடு ஒரு ஹேர் மாஸ்க் தயார் செய்து பயன்படுத்தலாம்.
  • இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எடுத்து அதனை பொடி செய்து கொள்ளவும். இப்போது 10 – 15 கறிவேப்பிலை இலைகள், வெந்தய பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி எடுத்து அனைத்தையும் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளுங்கள்.
  • இந்த பேஸ்டை உங்கள் தலைமுடி வேர்க்கால்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசுங்கள். இப்படி செய்து வர செலவே இல்லாமல் முடி வளர்ச்சியை பெற முடியும்.

Sharing is caring!