ஒரே நாளில் வெள்ளை முகம் சாத்தியமா?

அழகு குறிப்பு குறித்த சுய கட்டுரைகள் சமூக வளைதளங்களில் தடையின்றி வந்துகொண்டிருக்கிறது.  பெரும்பாலும்  ஒரே நாளில், ஒரு மணி நேரத்தில், ஐந்து நிமிடத்தில் என்ற தலைப்புகளை தாங்கியபடி இருக்கிறது. இவை சாத்தியமா என்ற சந்தேகத்தை சரும பராமரிப்பு மருத்துவரிடம் முன்வைத்தோம்.

நீங்கள் சொன்ன இந்த கட்டுரைகளை எந்த சரும பராமரிப்பு மருத்துவரும் அனுபவமிக்க அழகு கலை நிபுணர்களும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அனுபவமிக்க அழகு குறிப்பு நிபுணர்கள் சொல்லியிருந்தாலும் தற்காலிகமாக முகம் பளிச் என்று ஆக்கும் குறிப்புகளைமட்டுமே சொல்லியிருப்பார்கள்.அந்த வகையில் உடனடியாக முகத்துக்கு பளிச் வெண்மை தரும் பொருள்களை பார்க்கலாம். அதில் ஒன்று பாரம்பரியமாக நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பாசிபயறு.

பாசிபயறை முழுதாக வாங்கி, ஈரமில்லாமல் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துகொள்ளுங்கள். தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் இதனுடன் பால் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுங்கள். சோப்புக்கு பதிலாக இந்த பயத்தம் மாவை தேய்த்தும் குளிக்கலாம்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது எந்தவிதமான பக்கவிளைவும் வராது. அதோடு முகம் எப்போதும் பளிச் என்று இருக்கும். இனி முகத்துக்கு க்ரீம் பயன்படுத்துவதை விட இந்த மாவு பயன்படுத்துங்கள்.

Sharing is caring!