கண்களுக்கு கீழே சுருக்கமா? இதை செய்யுங்க…..

தென்னிந்தியாவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது போல, வட இந்தியர்கள் பிறந்தது முதல் சருமத்திற்கு கடுகு எண்ணெய் தேய்த்துதான் குளிப்பார்கள்.

காரணம் குளிர் மிக அதிகமாக உள்ள பிரதேசங்கள் அவை. இந்த கடுகு எண்ணெய் உடலுக்கு சூட்டினை தந்து.

அவர்களின் உடல் வெப்ப நிலை உயரச் செய்கிறது. மேலும் கடுகு சருமத்திற்கு நிறம் அளிக்கும். முகப்பரு, அழுக்கு, கரும்புள்ளி ஆகியவைகள் வராமல் பளிச்சென்று சுத்தமான சருமத்தை தரும்.

அதனால்தான் வட இந்தியர்களின் சருமம் அழகாய் மிருதுவாய் இருக்கிறது.

கண்களுக்கு கீழே பை தொங்குகிறதா?

சரியான தூக்கம் இல்லாமல் அல்லது, நீர் சத்து உடலில் குறையும் போதும், வயதான பின்னும், கண்களுக்கு அடியில் பை போன்று தொங்கும். இது வயதான தோற்றத்தை தரும்.

 செய்முறை

கடுகினை பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கண்களுக்கு அடியில் போட்டு வந்தால், தொங்கும் சதை இறுக்கமடைந்து, கண்கள் இயல்பிற்கு வரும்.

Sharing is caring!