கண்களை சுற்றி கருவளையத்தால் அவதிப்படுகிறீர்களா?

கண்களை சுற்றி கருவளையத்தால் கஷ்டப்படுபவர்கள் க்ரீம்கள் பயன்படுத்துவதை விட்டு விட்டு, இயற்கையான முறையில் பயன்படுத்தி வாருங்கள்..

கண்ணுக்கு குளிர்ச்சி தேவை

எப்போதும் ஓயாத வேலையைக் கண்ணுக்கு கொடுக்கும் போது கண்ணும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளும் களையிழக்கும். முக்கியமாக கணிணித்துறையில் இருப்பவர்களுக்கு கண்களுக்கான முழு ஓய்வு என்பது தூங்கும் போது மட்டும்தான்.

அதனால் கிடைக்கும் இடைவெளியில் கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது கண்களை மட்டுமல்ல கருவளையத்தையும் மெதுவாக போக்கும்.

கற்றாழை

கற்றாழை சருமத்துக்கு பளப்பளப்பு, நிறம் கொடுக்கும். சருமத்தை மிருதுவாக வைக்க உதவும். பொலிவாக வைத்திருக்கும். மேலும், கற்றாழை மடலை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பகுதியுடன் மஞ்சள் தூளை குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி கொள்ளவும்.

கண்களைச் சுற்றியும், கருவளையம் சுற்றியும் மிதமாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இரண்டே நாளில் க்ரீம் போடாமலேயே சருமத்தின் அழகு கூடுவதோடு கருவளையமும் மறைவதை உணர்வீர்கள்.

சாறாக பயன்படுத்தவும்

வெள்ளரிக்காய், எலுமிச்சை, கேரட், புதினா இவையெல்லாம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் ஆரோக்கியம் காப்பதிலும் முக்கியமானவையே. இவற்றைத் தனியாகவோ அல்லது சாறுகளை சேர்த்தோ பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய், கேரட் தலா- ஒரு துண்டு, எலுமிச்சை சாறு -ஒரு டீஸ்பூன், புதினா 10 இலைகள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் அரைத்து சாறு பிழிந்து கண்களைச் சுற்றி கருவளையத்தின் மீது தடவி வரலாம். இவை காய காய சாறை தடவி வந்தால் உடனடி பலனைக் காணலாம்.

சாறாக இல்லாமல் பேஸ்ட்டையும் பயன்படுத்தலாம். இயற்கை முறையில் கருவளையம் போக்குவதே சிறந்தது என்பது தான் அழகு கலை நிபுணர்களின் அறிவுரையாகவும் இருக்கிறது.

முகத்தை கழுவுங்கள்

வெளியில் செல்லும் போது எளிமையான மேக்கப் செய்தாலும் வீட்டுக்கு வந்ததும் முகத்தை நன்றாக கழுவுவது நல்லது. குறிப்பாக கண்களில் இருக்கும் மை, க்ரீம் போன்றவையும் முழுமையாக நீக்கி சுத்தம் செய்த பிறகே மேற்கண்ட குறிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையும் தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். அப் போது தான் உணவும், பராமரிப்பும் இணைந்து அழகான முகத்தை மேலும் தேவதையாக்கி காட்டும். இனி கருவளையம் என்ன கருமையான சருமத்தையும் விரட்டி அடிக்கலாம்.

Sharing is caring!