கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

முகத்தின் அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் மூக்கு கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாழ்வில் மூக்கு கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது. கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக் அப் போடலாம் என்பதை பார்க்கலாம்.

• கண்ணாடிக்கு நல்ல ப்ரேம் பயன்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள், கறை மற்றும் கழுவுதல் இல்லாமல் சரியாக இருக்கும். கண் இமை ரோமங்களை சுருட்டி விடுங்கள். பலவிதமான கலரில் மஸ்காராவை பயன்படுத்த வேண்டும் என்றில்லை. அடிப்படை கர்லர் ஒன்றே போதும் உங்கள் பணியை திறம்பட செய்துமுடித்திட. இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களின் கண்களுக்கான மேக்-அப் சிறப்பாக அமையும்.

• முடிந்தால் ஐ-ஷேடோ போடுவதை தவிர்க்கவும். அதற்கு காரணம் அது உங்கள் கண்ணாடியின் பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தங்கள் கண்களுக்கு மேக் அப் போடும் போது இதனை தவிர்க்க வேண்டும். நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள்.

• கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்-அப் செய்யும் போது, நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை(மெல்லியது அல்லது தடியானது) என்பதை தெளிவாக கூற வேண்டும். ஒருவேளை உங்கள் கண்கள் பெரியதாக தெரிந்தால், அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு, கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள்.

• கண்ணாடி அணிந்தவர்கள் கண்களுக்கு மேக் அப் போடும் போது அதிக முயற்சி இல்லாமல் இது உங்கள் முக தோற்றத்தை உயர்த்தி காட்டும். கண்ணாடி அணிந்தவர்கள் கண்களுக்கு மேக் அப் செய்யும் போது கன்னங்களில் பிங்க் நிற ப்லஷரை பயன்படுத்தினால் உங்கள் தோற்றம் பனித்துளியை போல அழகாக காட்சியளிக்கும்.

Sharing is caring!