கண் இமைகளில் முடி அடர்த்தியாக வளரனுமா?
கண் இமைகளானது, நம்முடைய இரண்டு கண்களையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. இது நமது கண்களை அழகாகவும், வசீகரமாகவும் காட்டுகிறது.
நாம் அன்றாடம் கண் இமைகளுக்கு தரமற்ற கண்மைகளை பயன்படுத்துவதன் மூலம், கண் இமைகள் உதிரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே சில இயற்கையான முறைகளை பயன்படுத்தி, கண் இமை முடிகளை அடர்த்தியாக வளரச் செய்து நமது கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
தற்போது கண் இமைகளை அடர்த்தியாக வளர சில எளிய இயற்கை முறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.
- விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை இரவு தூங்கும்முன் கண் இமைகளில் தடவி மசாஜ் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
- எலுமிச்சை தோலை விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் ஒரு வாரம் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை தடவி வந்தால் முடி வளரும்.
- இரவு தூக்கும் முன் பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் முடி அடர்த்தியாகும்.
- குளிர்ச்சியாக இருக்கும் கிரீன் டீயில் பஞ்சு தொட்டு கண் இமைகளில் தடவி வர அடர்த்தியாகும்.
- வைட்டமின், நியூட்ரியன்ஸ் நிறைந்த உணவுப் பழக்கம் இமைகளின் முடி அடர்த்திக்கு உதவும்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S